இணையதளத்தில் வெளியான இந்திய வரைபடம் குறித்து சர்ச்சை!
உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் இந்திய வரைபடம் தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சைய ஏற்படுத்தியதை அடுத்து, அதற்கு உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் இணைய பக்கத்தில் வெளியிடப்பட்ட இந்திய வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீர் பகுதி இந்தியாவுடன் சேர்க்கப்படாமல் தனியாக வேறு நிறத்தில் குறிப்பிடப்பட்டிருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சாந்தனு சென், பிரதமர் மோடிக்கு ஜனவரி 30ஆம் திகதி கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உலக சுகாதார அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் பதில் அளித்தார். அதில்,
உலக சுகாதார அமைப்பின் இணையதளத்தில் இந்திய வரைபடத்தை தவறாக குறிப்பிட்டுள்ளது தொடர்பாக கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் ஜெனிவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தர தூதரகத்தில் விளக்கம் கொடுத்துள்ளனர்.
அவர்கள் தங்கள் இணையதளத்தில் மறுப்பு பதிவிட்டு தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.