ரஷ்யாவை உலுக்கும் கொரோனா வைரஸ்! ஒரே நாளில் இத்தனை ஆயிரம் பேர் உயிரிழப்பா?
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1,181 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்த முதல் நாடாக அமெரிக்கா விளங்கி வருகின்றது.
இதைத்தொடர்ந்து இந்தியா இரண்டாவது இடத்திலும் பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. கொரோனா அதிகம் பாதித்த நாடுகளில் ஒன்று ரஷ்யா. ரஷ்யா நாட்டில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பயங்கர வேகமாக பரவி வருகின்றது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,209 கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 99 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1,181 பேர் உயிரிழந்ததால் அங்கு பலியானோர் எண்ணிக்கை 2.86 லட்சத்தைக் கடந்துள்ளது. தற்போது 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.