இங்கிலாந்தில் கொரோனா அச்சம்; சிவப்பு பட்டியலில் மேலும் நான்கு நாடுகள்
கொரோனா அச்சம் காரணமாக ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென் அமெரிக்கா உள்ளிட்ட 30 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு இங்கிலாந்தில் நுழைய தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் மேலும் நான்கு நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
அதன்படி , பாகிஸ்தான், கென்யா, பிலிப்பைன்ஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளை இங்கிலாந்து சிவப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
இதன்படி, இந்த நாடுகளில் இருந்து இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டு மக்களை தவிர்த்து பிறர் வருவதற்கு தடை விதிக்கப்படும் என்றும், இந்த பயண தடையானது, வரும் ஏப்ரல் 9-ம் திகதி காலை 4 மணியில் இருந்து அமலுக்கு வரும் என அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
இதேவேளை இதற்கு பின்னர் அந்த நாடுகளில் இருந்து வரும் இங்கிலாந்து மக்கள் 10 நாட்கள் கட்டாயம் ஓட்டல்களில் தங்கியிருக்க வேண்டும் என உத்தரவு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.