வடகொரியாவில் ராக்கெட் வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா!

COVID-19 COVID-19 Vaccine North Korea
By Sundaresan May 15, 2022 07:40 AM GMT
Report

வடகொரியாவில் 3 நாட்களில் 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர்களில் 42 பேர் உயிரிழந்து உள்ளனர்.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளால் 2 ஆண்டுகளாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. வடகொரியாவில் இதுவரை கொரோனா தொற்று பாதிப்பு பற்றிய தகவல்கள் வெளிவந்தது இல்லை.

ஆனால் இப்போது அங்கும் இந்த தொற்று பரவ தொடங்கி உள்ளது. இது குறித்து அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் கடந்த 12ஆம் திகதி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து, நாடு முழுவதும் ஊரடங்கு பொதுமுடக்கமும் அறிவிக்கப்பட்டது.

அந்த நாட்டில் இதுவரை ஒருவர்கூட தடுப்பூசி போடவில்லை. கொரோனாவுக்கு எதிரான பேராயுதம் தடுப்பூசிதான் என்கிற நிலையில் அங்கு யாரும் தடுப்பூசி போட்டு கொள்ளாத சூழலிலும், போதிய சிகிச்சை வசதிகள் இல்லாத நிலையிலும் வடகொரியா என்ன செய்ய போகிறது என உலக நாடுகள் உற்று நோக்கி வருகின்றன.

எனினும், கொரோனா தொற்று பலி எண்ணிக்கை அந்நாட்டில் அதிகரிக்க தொடங்கி உள்ளது. ஏற்கனவே 6 பேர் இறந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், மேலும் 21 பேர் பலியானார்கள். இதனால் பலி எண்ணிக்கை நேற்று வரை 27 ஆக அதிகரித்தது. ஆனால் ஒருவரது உயிரிழப்பு மட்டுமே அரசால் உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதற்கிடையே ஆளும் கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டத்தில், நாடு தனது அவசர கால இருப்புகளில் இருந்து விடுவித்துள்ள மருத்துவ பொருட்களை விரைவாக வினியோகிப்பதற்கான வழிமுறைகளை பற்றி அதிகாரிகள் விவாதித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

மற்ற நாடுகளில் கொரோனாவை எப்படி வெற்றிகரமாக கையாண்டார்கள் என்பதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, சீனாவில் இருந்து உதாரணம் எடுத்துக்கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று தலைவர் கிம் ஜாங் அன் உத்தரவிட்டுள்ளார் என தெரிய வந்துள்ளது.

வட கொரியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வராவிட்டால் அது பேரழிவுகளை ஏற்படுத்தி விடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சீனாவும் தனது நட்பு நாடான வட கொரியாவுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளது. ஆனாலும் இதற்கான வேண்டுகோள் வடகொரியா தரப்பில் இருந்து பெறப்படவில்லை என்று சீனாவும் கூறுகிறது.

வட கொரியாவில் என்ன நடக்கப்போகிறது, கொரோனாவை எப்படி கட்டுப்படுத்த போகிறார்கள் என்று உலகமே ஆவலுடன் எதிர்நோக்குகிறது. கடந்த ஏப்ரல் கடைசியில் இருந்து காய்ச்சல் வேகமாக பரவி வருகிற நிலையில், கடந்த 3 நாட்களில் இந்த பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 20 ஆயிரத்து 620 ஆக உயர்ந்து உள்ளது.

தொடர்ந்து 3 லட்சத்து 24 ஆயிரத்து 550 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ சிகிச்சையில் உள்ளனர் என வடகொரியாவில் இருந்து வெளிவரும் அரசு ஊடக செய்தி தெரிவித்துள்ளது. இதுதவிர, கூடுதலாக 15 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 42 ஆக அதிகரித்து உள்ளது.

இதனை தொடர்ந்து அந்நாட்டின் அனைத்து மாகாணங்கள், அனைத்து நகரங்கள் மற்றும் கவுன்டி பகுதிகளிலும் முழு அளவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து பணி நிறுவனங்கள், உற்பத்தி பிரிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் ஒன்றுக்கொன்று தொடர்பில் இல்லாத வகையில் மூடப்பட்டு உள்ளன என்றும் அரசு ஊடக செய்தி தெரிவித்து உள்ளது.

இதுபற்றி வடகொரிய அதிபர் கிம் கூறும்போது, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு தோற்றுவித்ததில் இருந்து இதுவரையில், நாட்டில் பரவி வரும் கொடிய நோயானது பேரிடராக உள்ளது என கூறியுள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US