இந்தியாவிலிருக்கும் கனேடிய தூதரக ஊழியர்களுக்கு கொரோனா தொற்று
இந்தியாவிலிருக்கும் கனேடிய தூதரக ஊழியர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தூதரக செய்தி தொடர்பாளர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ள செய்தி ஒன்றில்,
தூதரக ஊழியர்களும், பணிக்கமர்த்தப்பட்டுள்ள உள்ளூர் அலுவலர்கள் சிலரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், எத்தனை பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளார்கள் என்பதை உறுதி செய்ய முடியவில்லை என தூதரகம் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுவதாகவும், அவர்கள் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறும், 14 நாட்களுக்கு அலுவலகத்துக்கு திரும்பவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்றாலும், தங்கள் அலுவலகம் திறந்தே இருப்பதாகவும், வெளிநாடுகளில் வாழும் கனேடியர்களுக்கு இப்போதும் உரிய ஆலோசனைகளை அளித்துவருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான கனேடிய தூதரகம், தற்போது கொரோனா மையமாக மாறியுள்ள புது டில்லியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.