ரஷ்யாவில் கொரோனாவால் மேலும் 1,121 பேர் கொரோனாவால் பாதிப்பு!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 29,558 பேர் பாதிக்கப்பட்டதோடு 1,121 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்யாவில் இதுவரை மொத்தமாக 1கோடியே 46ஆயிரத்து 454 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 2 இலட்சத்து 90 ஆயிரத்து 604 பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 9 இலட்சத்து 85ஆயிரத்து 934 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 2,300 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ரஷ்யாவில் 28,561 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 95இலட்சத்து 28ஆயிரத்து 314 பேர் குணமடைந்துள்ளனர்.