சுவிஸில் மீண்டும் அதிகரிக்க தொடங்கும் கொரோனா பரவல்!
சுவிஸில் கொரோனா வைரஸ் தொற்றினால் 24 மணிநேரத்தில் 4,902 பேர் பாதிக்கப்பட்டதோடு 2 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுவிஸில் இதுவரை மொத்தமாக 10இலட்சத்து 20 ஆயிரத்து 311 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 11 ஆயிரத்து 548 பேர் மரணமடைந்துள்ளனர்.
சுவிஸில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 1 இலட்சத்து 46ஆயிரத்து 193 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 207 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுவிஸில் 1,070 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து 8 இலட்சத்து 62 ஆயிரத்து 570 பேர் குணமடைந்துள்ளனர்.