ஓமானில் தீவிரமாக பரவும் கொரோனா: மக்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!
covid19
Oman
corona infection
coronavirus
corona control
By Shankar
ஓமானில் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாக பரவி வருவதால் அந்நாட்டு அரசாங்கம் மக்களுக்கு சில விதிமுறைகளை விதித்துள்ளது.
- ஓமானில் கோவிட் பரவுவது தொடர்ந்து தீவிரமாக இருப்பதால், அனைவரும் சரியான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
- பொது இடங்கள், வேலை செய்யும் இடங்கள் மற்றும் தங்கும் பகுதிகளில் முககவசம் முறையாக அணிந்து சமூக இடைவெளியை உறுதி செய்யுங்கள்.
- உங்கள் கைகளை அடிக்கடி சுத்தப்படுத்த வேண்டும்.
- முடிந்தால் பாதுகாப்பு கையுறைகள் அணிய வேண்டும்.
- கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஓமான் உச்ச குழு, சுகாதார அமைச்சகம் மற்றும் நகராட்சிகள் அறிவித்த வழிகாட்டுதல்களை கண்டிப்பாக பின்பற்றுங்கள்.
- எந்த காரணத்திற்காகவும் பகுதிநேர ஊரடங்கு நேரத்தில் வெளியே செல்ல வேண்டாம். ராயல் ஓமான் காவல்துறையின் தலைமையில் அனைத்து Governorates-லும் கடுமையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
- எந்த வகையிலும் விதிமுறைகளை மீறுவதாகக் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபருக்கு பெரும் தொகை அபராதம் விதிக்கப்படும், சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நாடுகடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிகிறது எனவே மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US