ஜப்பானை மீண்டும் ஆட்டிப்படைக்கும் கொரோனா; ஒரே நாளில் 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு!
ஜப்பானில் ஒரே நாளில் கோவிட்-19 காரணமாக 415 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில் இது ஜப்பானில் ஒருநாளில் பதிவாகி இருக்கும் ஆக அதிக கோவிட் மரணம் ஆகும்.
விடுமுறைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் ஜப்பானில் எட்டாவது முறையாகக் கோவிட் பரவுகிறது. நாடு முழுதும் 200 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கோவிட் பதிவாகியிருக்கிறது.
அதேவேளை கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் இந்த வாரம் அன்றாட எண்ணிக்கை 4 விழுக்காடு அதிகரித்திருப்பதாக கூறப்படுகின்றது.
மருத்துவமனையில் கூட்டம் அதிகம் என்பதனால் சாதாரண அறிகுறி உள்ளவர்கள் வீட்டில் இருந்து ஓய்வெடுக்கும்படி ஜப்பானிய அரசாங்கம் கேட்டுக்கொண்டது.
அதேசமயம் உலகிலேயே ஆக அதிகமான உறுதிசெய்யப்பட்ட கோவிட் சம்பவங்கள் கொண்ட நாடு ஜப்பான் என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது.
மேலும் உலக நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்ட கோவிட் மரணத்தில் அமெரிக்காவுக்கு அடுத்து ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.