எச்சரிக்கையை பொருட்படுத்தாத உலக நாடுகள்..பெருந்தொற்றுக்கு வழிவகுத்தது: வெளியான அதிர்ச்சி தகவல்

Praveen
Report this article
கொரோனாவின் ஆரம்பகட்டத்தில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை உலக நாட்டுல உதாசீனப்படுத்தியதால் இந்த நிலைமை உருவானதற்கு காரணம் என தன்னாட்சி குழு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.
பெருந்தொற்றுக்கு தயாராதல் மற்றும் பொறுப்புக்கான தன்னாட்சி குழு வெளியிட்டு உள்ள அந்த அறிக்கையில், உலக நாடுகள் பெருந்தொற்றை எதிர்கொள்ள தயாராகவில்லை என எங்களுடைய குழுவுக்கு தெளிவாக தெரிகிறது. அதனுடன், எச்சரிக்கைகளையும் புறக்கணித்தன. இதன் விளைவாக அழிவை ஏற்படுத்த கூடிய பெருந்தொற்று பரவியுள்ளது என தெரிவித்து உள்ளது.
சர்வதேச நாடுகள் வேறுபட்டு செயலாற்றி, பெருந்தொற்றாக ஆவதில் இருந்து இதனை தடுத்திருக்கலாம். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிசயத்தக்க வகையில் உயரும்வரை மற்றும் சர்வதேச அளவில் பரவும் வரை அரசாங்கங்கள், பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அறிவியலை குறைத்து மதிப்பிட்ட உலக நாடுகள், நம்பிக்கையை கட்டமைக்க தவறி விட்டன. ஒத்து வராத கொள்கைகளையே தொடர்ந்து மேற்கொண்டன.
இதனால், பெருந்தொற்று ஏற்பட்டு அவை பின்தங்கின. அந்நாடுகளில் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விகிதங்கள் ஏற்பட்டன என தெரிவித்து உள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற பெருந்தொற்றுகளை தவிர்க்கும் முயற்சியாக, சுகாதார அச்சுறுத்தலுக்கான சர்வதேச கவுன்சில் ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் இந்த குழு வலியுறுத்தி உள்ளது.