ஏலான் மஸ்க் அமெரிக்க குடியுரிமையை இழக்க நேரிடுமா!
உலகின் முதனிலை பணக்காரரான ஏலான் மஸ்க்கின் குடியுரிமையை ரத்து செய்வது குறித்த பேச்சுக்களை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு வருகின்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மஸ்க் நியூயார்க் சட்டமன்ற உறுப்பினர் ஜொரான் மம்தானி மற்றும் நடிகை ரோசீ ஓ’டொனல் ஆகியோரின் அமெரிக்க குடியுரிமை கேள்விக்குள்ளாக இருக்கக்கூடும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அண்மையில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தென் ஆப்பிரிக்காவில் பிறந்த தொழிலதிபரான ஏலான் மஸ்க்: 2002ஆம் ஆண்டு அமெரிக்க குடியுரிமை பெற்றார்.
குடியுரிமை
உகாண்டாவில் பிறந்த ஜொரான் மம்தானி, 2018ல் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். தற்போதைய நியூயார்க் மாநில சட்டமன்ற உறுப்பினராக கடமையாற்றுகின்றார்.
அமெரிக்காவில் பிறந்த நகைச்சுவை நடிகை, சமூக விமர்சகர் ரோசீ ஓ’டொனல், சமீபத்தில் தனது மகனுடன் ஐர்லாந்தில் குடியேறியுள்ளார்.
ஒரு செய்தியாளரிடம், ஏலான் மஸ்க் அமெரிக்காவில் இருக்க வேண்டுமா எனக் கேட்டபோது, டிரம்ப், "பார்க்க வேண்டியதுதான், ஒரு முடிவுக்குவரவில்லை" என கருத்து வெளியிட்டிருந்தார்.
மம்தானியைப் பற்றி, “நம் நாட்டில் கம்யூனிஸ்ட் தேவை இல்லை. இருப்பினும், அவர் இருப்பின், நான் அவரை கண்காணிக்க நேரிடும். அவரது குடியுரிமையை விசாரிக்க விரும்புகிறேன்” எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.
ரோசீ ஓ’டொனல் குறித்தேனும், Truth Social வலைதளத்தில் அவர் “நம் நாட்டுக்கே ஆபத்தானவர்” எனக் குற்றம்சாட்டி, “அவரது குடியுரிமையை ரத்து செய்வதற்கான சிந்தனையில் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
எனினும், ஐக்கிய அமெரிக்க சட்டப்படி, குடியுரிமையை நிராகரிக்க முடியும் எனினும், அதற்கு இரண்டு முக்கியமான அடிப்படைகள் இருக்கின்றன:
1. முறைமையற்ற குடியுரிமை விண்ணப்பம்
2. முக்கியமான தகவலை மறைத்தல் அல்லது பொய்யான தகவல் வழங்கல்
இதுபோன்ற குடியுரிமை ரத்து செய்வது குறித்த வழக்குகள் கடந்த காலத்தில் போர்குற்றவாளிகள் மீது மேற்கொள்ளப்பட்ட போதிலும், இது மிகவும் அரிதான நடைமுறையாகவே இருந்து வருகிறது.