ரொறன்ரோவில் முக்கிய தெருவின் பெயரை மாற்ற முடிவு
டன்டாஸ் வீதியின் பெயர் மாற்றத்திற்கு ரொறன்ரோ நகர சபை ஒப்புதல் அளித்துள்ளது. ஹென்றி டன்டாஸ் பெயரை தெருவில் இருந்து நீக்க ஆதரவாக 17-7 என நகர சபை வாக்களித்தது.
வீதியின் பெயர் மட்டுமின்றி, அவர் தொடர்பில் சுரங்க ரயில் பாதை மற்றும் ஒரு சதுக்கத்தின் பெயரும் மாற்றப்பட உள்ளது.
பெயர் மாற்ற முடிவான நிலையில் 2022 இரண்டாவது காலாண்டில், புதிய பெயரை மக்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளனர்.
இனவாத தாக்குதலுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது, ஹென்றி டன்டாஸ் பெயரை தெருவில் இருந்து நீக்க சுமார் 14,000 மக்கள் ஆதரவளித்திருந்தனர்.
பிரித்தானியா பேரரசு அடிமைத்தனத்தை ஒழிக்க சட்டமியற்றி இருந்தாலும், 18ம் நூற்றாண்டு அரசியல்வாதியான ஹென்றி டன்டாஸ் 15 ஆண்டுகள் வரையில் அந்த சட்டத்தை அமுலுக்கு கொண்டுவர தாமதப்படுத்தியுள்ளார்.
மட்டுமின்றி பூர்வக்குடி மக்களுக்கு எதிராகவும் ஹென்றி டன்டாஸ் செயல்பட்டுள்ளார் என ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.
ரொறன்ரோ வீதிகளில் இருந்து ஹென்றி டன்டாஸ் பெயரை நீக்குவதால் 5.1 மில்லியன் டொலர் முதல் 6.3 மில்லியன் டொலர் வரையில் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.