அதிக வெப்பம் காரணமாக பாதித்துள்ள ஆசிய பிராந்திய நாடுகள்
ஆசிய பிராந்திய நாடுகளை பாதித்துள்ள அதிக வெப்பம் காரணமாக கிழக்கு இந்திய மக்கள் கடும் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளனர்.
கிழக்கு இந்தியாவில் கடந்த 1901 ஆம் ஆண்டுக்கு பிறகு பதிவான மிக அதிகளவான வெப்பநிலை இந்த ஏப்ரல் மாதம் பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவை பாதித்துள்ள இந்த வெயிலின் தாக்கத்தால், இதுவரை 9 பேர் உயிரிழந்தனர்.
பங்களாதேஷிலும் 40 டிகிரி செல்சியஸ் வெப்பமான வானிலை பதிவாகியுள்ளதுடன் 7 தசாப்தங்களின் பின்னர் நாட்டை பாதித்த மிக மோசமான வெப்ப அலை வானிலையாக இது பதிவுகியுள்ளது.
தாய்லாந்திலும் தற்போது அதிகளான வெப்பநிலை பதிவாகியுள்ளதுடன், அதன் தாக்கத்தினால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன