குதிரை வால் சடைக்கு தடை விதித்த நாடு
ஜப்பானில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் குதிரை வால் (Ponytails) சிகை அலங்காரத்திற்கு தடை விதித்துள்ளனர்.
குதிரை வால் (Ponytails) ரக சிகை அலங்காரம் அணிந்து வரும் மாணவிகளின் கழுத்து பகுதி மாணவர்களுக்கு பாலுணர்வுகளை ஏற்படுத்தும் என்பதால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் மீது விசித்திரமான கொள்கைகள் திணிக்கப்படுவது இது முதல் முறையல்ல என்றாலும், இந்த தடை குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.
முன்னாள் நடுநிலைப் பள்ளி ஆசிரியரான மோட்டோகி சுகியாமா கூறுகையில், "நான் எப்போதும் இத்தகைய கொள்கைகளுக்கு எதிராக இருக்கிறேன்.
ஆனால் இதுபோன்ற விதிகளுக்கு போதிய எதிர்ப்பு இல்லை என்றும், இதுபோன்ற விதிகள் சர்வசாதாரணமாகிவிட்டதால் மாணவர்கள் ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறினார்.
மேலும் சிலர் தடை என்பது பெண்களைப் பற்றிய ஆண்களின் பார்வையை ஏமாற்றும் பிற்போக்கு சிந்தனை என்று எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.