மணமேடையில் அடிதடியில் இறங்கிய புது மணதம்பதிகள்!
நேபாளத்தில் நடந்த திருமண சடங்கு குறித்த காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மணமேடையில் மணமகனும், மணமகளும் தங்கள் திருமண விழாவில் மேடையில் வைத்து சண்டை போட்டுகொண்டனர்.
பாரம்பரிய திருமண உடையில் மணமகனும் மணமகளும் மேடையில் அமர்ந்திருப்பதுடன் காணொளி தொடங்கிய நிலையில் சில நிமிடங்களுக்குப் பிறகு, தம்பதிகள் ஒருவருக்கொருவர் உணவளிக்கும் சடங்கைத் தொடங்கி உள்ளனர்.
அத்தோடு அவர்கள் உடல் ரீதியாக ஒருவரையொருவர் தள்ளுவதும் இழுப்பதும் நடந்துள்ளதோடு தொடர்ந்து ஒருவருக்கொருவர் தாக்கி சண்டையிட்டுக்கொண்ட காணொளி சமூக வலைதளங்களில் வைராகியுள்ளது.