பிரிட்டனில் தனியாக வாழ்ந்த தம்பதி மர்மமாக உயிரிழப்பு
பிரிட்டனிலுள்ள வெஸ்ட் மிட்லேண்ட்ஸ் பகுதியில், கெனில்வொர்த் என்ற சாலையில், 1.5 மில்லியன் டொலர் மதிப்பு கொண்ட மிகப்பெரிய மாளிகை வீடு அமைந்துள்ளது.
குறித்த மாளிகையில் இருவர் உயிரிழந்து கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு, அவசர உதவி குழுவினர் மற்றும் மருத்துவர்களுடன் சென்றிருக்கிறார்கள்.
அந்த வீட்டில் வசித்த வந்த சேவா படியால் என்ற 87 வயது முதியவரும் அவரது மனைவி சுக்ஜித் (73) இருவரும் உயிரிழந்ததுமை உறுதி செய்யப்பட்டது. அத்துடன் வீட்டில் அவர்கள் இருவர் மட்டுமே இருப்பதால் கொலை அல்லது தற்கொலையாக இருக்கும் என பொலிஸார் கருதியுள்ளனர்.
வீட்டின் அறையில் மனைவியும், தோட்டத்தில் கணவரும் உயிரிழந்த நிலையில் கிடந்த நிலையில், அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன் சம்பவம் தொடர்பில் அருகில் வசிப்பவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துணிக்கடை வியாபாரியான, சேவா படியாலுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
எனினும் வயதான தம்பதிகள் இருவரும் தனியாகதான் அவ்வீட்டில் வசித்து வந்தார்கள் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வயதான தம்பதிகள் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.