36 ஆண்டுகள் விடா முயற்சி... பல மில்லியன் டொலர் அள்ளிய கனேடிய தம்பதி
கனடாவில் ஒரே இலக்கத்தில் 36 ஆண்டுகளாக லொட்டரி சீட்டு வாங்கி வந்த பிரிட்டிஷ் கொலம்பியா தம்பதிக்கு இறுதியில் பெருந்தொகை பரிசாக கிடைத்துள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் வசிக்கும் Lana மற்றும் Joery Leung தம்பதி கடந்த 1980களில் இருந்தே ஒரே இலக்கத்தில் லொட்டரி சீட்டு வாங்கி வந்துள்ளனர்.
தற்போது அவர்களுக்கு அவர்களது விடா முயற்சி பலனளித்துள்ளது. இந்த மாதம் அவர்களுக்கு 6 மில்லியன் டொலர் பரிசாக கிடைத்துள்ளது. தங்கள் வாழ்க்கையில் இது மறக்க முடியாத தருணம் என குறிப்பிட்டுள்ள அவர்கள், எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், தங்கள் மகன் தான் முதலில் இது குறித்து தெரியப்படுத்தினார் எனவும், ஆனால் எங்களால் நம்ப முடியவில்லை எனவும், பின்னர் உறுதிப்படுத்தியதும் மகிழ்ச்சி தாங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
பெருந்தொகை லொட்டரியில் பரிசாக கிடைத்திருந்தாலும், தற்போது வேலையை விட்டுவிடும் முடிவு இல்லை எனவும், ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் வேலையில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார் Joery Leung.
ஆனால், இரண்டு வேலை பார்த்து வரும் Lana அதில் ஒன்றை விட்டுவிட முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மகனுக்கும் மகளும் லொட்டரி தொகையில் உதவி செய்யவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.