உலக நாடுகளுக்கு மீண்டும் கிலியை ஏற்படுத்தியுள்ள கொரோனா ; அச்சத்தில் மக்கள் !
உலக நாடுகளை பெரும் அதளபாதாளத்திற்குள் தள்ளிய கொரோனா வைரஸ் மீண்டும் சிங்கப்பூர், ஹாங்காங் நாடுகளில் பரவ ஆரம்பித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பல உயிர்களை பறித்துச் சென்ற சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மீண்டும் வந்துள்ளமி மக்களி பீதியில் ஆழ்த்தியுள்ளது.
ஹாங்காங், சிங்கப்பூரில் கொரோனா தொற்று
7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் ஹாங்காங் நகரில் கொரோனா தொற்றின் பாதிப்பு தீவிரமடைந்துள்ளதாக அந்நகரின் சுகாதார பாதுகாப்பு மைய அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.
இதேவேளை, இம் மாதத்தின் முதல் வாரத்தில் தொற்று எண்ணிக்கை ஒரு வருடத்தில் அதிகபட்ச அளவை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும் மாதிரிகளில் தொற்று உறுதியாவது அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் மக்கள் அடர்த்தி அதிகம் உள்ள சிங்கப்பூரிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதியாக எடுத்த கணக்கெடுப்பின்படி கோவிட்-19 தொற்று எண்ணிக்கை சுமார் 14,200 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை உலகவாழ் மக்கள் மத்தில் பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.