கனடாவின் இந்தப் பகுதியில் ஓநாய் தொல்லை ?
கனடாவின் நோவா ஸ்கோட்டியா மாகாணத்தின் மாஹோன் கடற்கரைப் பகுதியில் ஓநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலா பயணிகள் கரையோர பகுதிகளை பார்வையிடுவதற்காக அதிக அளவில் குறித்த பகுதிக்கு வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனினும் அண்மைக்காலமாக ஓநாய்கள் இந்தப் பகுதியை ஆக்கிரமித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓநாய்கள் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பிலான பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிடைக்க பெறுவதாக நோவா ஸ்கோட்டியாவின் இயற்கை வள திணைக்களம் தெரிவித்துள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது மிகவும் அவசியமானது எனவும் ஓநாய்களினால் ஏற்படக்கூடிய தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.