ஹிட்லரை தோற்கடிக்க உருவாக்கப்பட்டது உக்ரைனுக்காக புதுப்பிக்கப்பட்டது!
ரஷ்யாவை எதிர்த்து போரிட உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை விரைவு படுத்துவதற்கான கடன் குத்தகை சட்ட முன்வடிவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) கையெழுத்திட்டுள்ளார்.
இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரை தோற்கடிக்க ராணுவ உதவிகள் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட இந்த சட்டமானது தற்போது, உக்ரைனுக்காக புதுப்பிக்கப்பட்டு கையெழுத்திடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சட்டம் அமெரிக்கா உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்களை வழங்குவதை எளிதாக்குகிறதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேசமயம் உக்ரைனுக்காக கூடுதலாக 33 பில்லியன் டாலர்கள் நிதி வழங்குவதற்கான கோரிக்கையையும் ஜோ பைடன் (Joe Biden)அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளதாக மேலும் தெரிவிக்கபடுகின்றது.