அரபு ஆடை அணிந்து வலம் வந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ!
போர்த்துகல் கால்பாந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) சவூதி அரேபியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய நாகரீகத்தை குறிக்கும் வகையில் அரபு ஆடை அணிந்து வலம் வந்துள்ளார்.
அவர் தனது அல்-நாஸ்ர் குழு உறுப்பினர்களுடன் ஒரு கொண்டாட்ட நாளை சிறப்பித்திருந்தார்.
சவுதி ப்ரோ லீக் தலைவர்களுக்கான ஒரு சிறப்பு நாளில் அணி-பிணைப்பு நடவடிக்கைகளின் வரிசையுடன், ரொனால்டோ தனது சக உறுப்பினர்களுடன் இணைந்துகொண்டார்.
3 நூற்றாண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவின் முதல் மாநிலம் உருவானதைக் கொண்டாடும் நாளைக் குறிக்கும் வகையில் ரொனால்டோ இஸ்லாமிய கலாசார ஆடை அணிந்திருந்தார்.
மைதானத்திற்கு வெளியே தனது அணி வீரர்களுடன் இணைந்து நடித்த ரொனால்டோ, காபி குடிப்பது போலவும், புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பது போலவும், கொண்டாட்ட வாளுடன் நடனமாடுவது போலவும் படம் பிடிக்கப்பட்டது.
38 வயதான ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட் வெளியேறி, சவுதி அரேபியாவின் அல் நாசர் அணியில் இணைந்துகொண்டார்.
ரொனால்டோ தனது தொடக்க இரண்டு ஆட்டங்களில் கோல் அடிக்கத் தவறிவிட்டார், அல்-வெஹ்தாவுக்கு எதிராக அற்புதமான 4 கோல்கள் உட்பட ஐந்து லீக் கோல்களைப் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.