ரொனால்டோவின் ‘லிவ் இன்’ உறவுக்கு ஷரியா சட்டத்தில் விலக்கு தருமா சௌதி?

Cristiano Ronaldo Football Saudi Arabia FIFA World Cup Qatar 2022
By Independent Writer Jan 12, 2023 07:52 PM GMT
Report

உலகின் நட்சத்திரக் கால்பந்து வீரர்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ செளதி அரேபியாவின் அல்-நாசர் கழகத்திற்காக விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அவரது தனிப்பட்ட வாழ்க்கை செளதி அரேபியாவில் மட்டுமன்றி உலகளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது, காரணம் ரொனால்டோ தனது லிவ்-இன் பார்ட்னர் ஜார்ஜினாவுடன் செளதி அரேபியாவில் ஆடம்பர வீட்டில் வசித்து வருகிறார்.

ரொனால்டோவின் ‘லிவ் இன்’ உறவுக்கு ஷரியா சட்டத்தில் விலக்கு தருமா சௌதி? | Cristiano Ronaldo Football Saudi Arabia Law

செளதி அரேபியாவில் நடைமுறையில் உள்ள இஸ்லாமிய ஷரியா சட்டத்தில், திருமணமாகாத தம்பதிகள் உடலுறவு கொள்வது அல்லது ஒன்றாக வாழ்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

இதற்காக இந்நாட்டில் கடுமையான தண்டனை வழங்கும் விதிமுறை உண்டு எனினும், இது தொடர்பில் செளதி அரேபிய அதிகாரிகள் அல் நாசர் கால்பந்து கழகம் அல்லது ரொனால்டோ எந்த ஒரு அறிக்கையும் வெளியிடவில்லை.

ரொனால்டோ செளதி கிளப்பில் இணைந்தது அரபு நாடுகளின் கால்பந்து உலகில் ஒரு மைல் கல்லாக கருதப்படுகின்றது.

மற்றுமொரு சாரார் இதில் காணப்படுகின்ற அரசியல் மற்றும் கலாச்சார தாக்கங்கள் பற்றியும் விவாதிக்கின்றனர். ரொனால்டோ தனது பார்ட்னர் ஜார்ஜினாவுடன் செளதி அரேபியாவில் வாழ்வதற்கு ’சலுகை’ வழங்கப்படலாம் என்று ஒருசாரார் தெரிவித்துள்ளனர்.

செளதி இளவரசர் முகமது பின் சல்மானின் விஷன் 2030க்கு இது ஒரு முக்கியமான நடவடிக்கை இந்நாடு இதனை 'ஸ்போர்ட் வாஷிங்' ஆகப் பயன்படுத்தி நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்களில் இருந்து கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கும் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

ரொனால்டோவின் ‘லிவ் இன்’ உறவுக்கு ஷரியா சட்டத்தில் விலக்கு தருமா சௌதி? | Cristiano Ronaldo Football Saudi Arabia Law

மான்செஸ்டர் யுனைடெட்டில் தனது கால்பந்து வாழ்வின் உச்சத்தை எட்டிய ரொனால்டோ கழக நிர்வாகக் குழுவுடன் எற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடுகள் அடுத்து இது குறித்து பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

இந்த நேர்காணலுடன் கழகம் ரொனால்டோவை பிரிய முடிவு செய்தது.

செளதி அரேபியாவில் ஷரியா சட்டம் திருமணமாகாத தம்பதிகள் ஒன்றாக வாழ்வதை தடை செய்கிறது.

வழக்கமாக ஒரு ஆணும் பெண்ணும் ஒரு ஹோட்டலில் தங்கும் போதோ அல்லது வீட்டு உரிமையாளர் தங்கள் வீட்டை யாருக்காவது வாடகைக்கு விடும் போதோ ஆவணச்சான்று கேட்கப்படும்.

அது பின்னர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும். செளதி அரேபியாவில் ஷரியா சட்டம் திருமணமாகாத தம்பதிகள் ஒன்றாக வாழ்வதை தடை செய்கிறது.

வழக்கமாக ஒரு ஆணும் பெண்ணும் ஒரு ஹோட்டலில் தங்கும் போதோ அல்லது வீட்டு உரிமையாளர் தங்கள் வீட்டை யாருக்காவது வாடகைக்கு விடும் போதோ அவர்களிடம் ஆவணச்சான்று கேட்கப்படும். அது பின்னர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும்.

இந்த சட்டத்தை மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் வெளிநாட்டினர் விஷயத்தில் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கடந்த பல ஆண்டுகளாக மென்மை போக்கு நிலவுகிறது.

2019 ஆம் ஆண்டில் செளதி அரேபியாவின் விசா கொள்கை தளர்த்தப்பட்டது. அதன்படி திருமணமாகாத வெளிநாட்டு தம்பதிகளும் ஹோட்டல் அறைகளை எடுக்க முடியும்.

அதே நேரத்தில் பெண்களும் ஹோட்டல் அறைகளில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் அவர்கள் தனியாக இருக்க வேண்டும். இதற்கு முன் தம்பதி அறையைப் பெறுவதற்கு திருமணச் சான்றை அளிக்க வேண்டும். ஆனால் ரொனால்டோவும் ஜார்ஜினாவும் செளதி அரேபியாவில் நீண்ட காலம் வாழ வேண்டியிருக்கும்.

எனவே அவர்கள் அங்கு தங்குவது விவாதப் பொருளாகவே உள்ளது. இந்நிலையில் செளதி அரேபியா சட்டத்தை மாற்றாது என்றும் வெளிநாட்டினருக்கு காட்டப்படும் மென்மை போக்கு மட்டும் ரொனால்டோ ஜார்ஜினா விவகாரத்திலும் செயல்படுத்தப்படும் என்றும் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ரொனால்டோ ஒரு சிறந்த கால்பந்துவீரராக இருப்பது செளதி அரேபிய அரசின் நடவடிக்கையில் இருந்து அவரை காப்பாற்றக்கூடும் என்று இரண்டு செளதி அரேபிய வழக்கறிஞர்களை மேற்கோள் காட்டி ஸ்பானிஷ் செய்தி முகமை EEF தெரிவித்துள்ளது. ”திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது சட்டப்படி இப்போதும் குற்றமாகும்.

ஆனால் அரசு அமைப்புகள் இதையெல்லாம் இப்போது கண்டும் காணாமல் இருக்கத்தொடங்கியுள்ளன. அதற்காக யாரும் தண்டிக்கப்படுவதில்லை.

ஆனால் ஏதேனும் குற்றச் செயல்கள் நடந்தால் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது ” என்று செய்தி முகமையிடம் பேசிய இந்த வழக்கறிஞர் தெரிவித்தார். ரொனால்டோ மற்றும் ஜார்ஜினாவின் உறவு கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக நீடிக்கிறது. 2016 முதல் இருவரும் ஒன்றாக உள்ளனர்.

அப்போது ரொனால்டோ ஸ்பானிஷ் கால்பந்து கிளப்பான ரியால் மாட்ரிட்டில் விளையாடிக்கொண்டிருந்தார். ஜார்ஜினா மற்றும் ரொனால்டோவுக்கு இன்னும் திருமணமாகவில்லை.

ஆனால் அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ரொனால்டோவுக்கு செளதி அரசு விலக்கு அளிக்கும் என்று பெரும்பாலான மக்கள் கருதும் அதே வேளையில் சட்டமும் மதமும் ஏழைகளுக்கு மட்டுமே என்பதை இது காட்டுகிறது என்று ஒரு ட்விட்டர் பயனர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

அதே நேரம் இந்த விஷயத்தில் செளதி அதிகாரிகளின் சாத்தியமான சலுகையை சில பயனர்கள் வரவேற்றுள்ளனர். ரொனால்டோ இப்போது ஜார்ஜினாவை திருமணம் செய்து கொள்வாரா என்று அவர்கள் கேள்வியும் எழுப்பினர்.           

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US