ஆற்றில் நீராடச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்!
இந்தோனேசியாவின் மலுகு தீவில் வாலி கிராமத்தில் வசித்து வந்த பெண் ஒருவரை முதலை பிடித்து விழுங்கி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் 54 வயதான ஹலிமா ரஹாக்பாவ் என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பெண் நேற்று முன்தினம் காலையில் குளிப்பதற்காக ஆற்றுக்கு சென்றிருக்கிறார். அப்போது அந்த ஆற்றில் இருந்த முதலை ஒன்று அவரை பிடித்து, விழுங்கி உள்ளது.
அவரை காணாமல் கிராமத்தினர் பல இடங்களில் தேடியுள்ளார். இதேவேளை அவர் போன இடம், விவரம் எதுவும் தெரியாமல் குடும்பத்தினரும் தவித்தனர்.
இந்நிலையில், நேற்று மீண்டும் அவரை தேட சென்றுள்ளனர்.
இதுபற்றி அந்த பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரரான ருஷ்டம் இலியாஸ் கூறும்போது,
ஆற்றின் அருகே ஒரு செருப்பும், உடல் பாகங்களும் கிடந்தன என்றார். இதனால், பயந்து போன கிராமவாசிகள் பொலிஸாரிடம் அதுபற்றி கூறினர்.
உடனே பொலிஸார் சம்பவ பகுதிக்கு சென்றனர். இதன்பின்பு பொலிஸார் முன்னிலையில், அந்த முதலையை கிராமத்தினர் பிடித்தனர். அதன் வயிற்று பகுதியை அறுத்து உள்ளே பார்த்ததில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
12 அடி நீளம் கொண்ட அந்த பெரிய முதலையின் இனம் எந்த வகையை சேர்ந்தது என பொலிஸாரே, கிராமத்தினரோ கண்டறிய முடியவில்லை.