மனைவி உடலுறவு கொள்ள மறுத்ததால் பச்சிளம் குழந்தையை காட்டுக்குள் விட்ட கொடூர தந்தை
தாய்லாந்தில் வசித்து வரும் 21 வயதான ஆண் தனது மனைவியை குழந்தை பிறந்த சில நாட்களில் உடலுறவு கொள்ள மறுத்ததால் தனக்குப் பிறந்த இரண்டு வார ஆண் குழந்தையை காட்டுக்குள் கொண்டு விட்டுள்ளார்.
மேலும் குழந்தை தரையில் படுத்திருக்கும் புகைப்படத்தையும் மனைவிக்கு அனுப்பியுள்ளார். இதனை பார்த்த மனைவி அதிர்ச்சியில் அப்பகுதி கிராமத் தலைவரிடம் புகார் அளித்துள்ளார்.
மேலும் ஆதாரமாக கணவர் அனுப்பிய புகைப்படம் மற்றும் உரையாடலை கிராமத் தலைவருக்கு பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த ஆணிடம் இருந்து குழந்தையை மீட்டு அவரது மனைவியிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தனது கணவனின் மீது அவரது மனைவி புகார் அளித்தார்.
அந்தப் புகாரில், கணவர் போதைப் பழக்கத்துக்கு அடிமையாக இருக்கிறார். சூதாட்டத்தில் ஈடுபடுகிறார் எனவும், தனது மற்றொரு 1 வயது குழந்தையையும், தன்னையும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்துகிறார்.
குழந்தை பிறந்த 2 வாரத்திலேயே உடலுறவுக்கு வற்புறுத்தி அடிக்கடி தகராரில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் அந்த ஆண், தனது மனைவியின் குற்றச்சாட்டுகளை மறுத்து குழந்தையை காட்டுக்குள் விட்டது வெறும் புகைப்படம் எடுப்பதற்காக மட்டுமே என தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து காவல்துறையினர் அந்த நபரை போதை பொருள் பரிசோதனையில் ஈடுபடுத்திய போது, அவர் போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டின் சட்டப்படி 9 வயதுக்கு குறைவான குழந்தைகளை தனியாக விட்டு விட்டால், அந்த குழந்தைக்கு எந்த உடல் நல பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும் கூட குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.