வயிற்றில் கன்றுக்குட்டி இருந்த நிலையில் பசுவை கொன்ற கொடூரம்
மேய்ச்சலுக்காக கட்டி வைக்கப்பட்டிருந்த பசுவை களவாடி இறைச்சிக்காக கொன்று அதன் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டியினை எடுத்து வீசி விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இச் சம்பவம் கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வட்டக்கச்சி பகுதியில் இடம் பெற்றுள்ளது.
அப் பசு கன்று ஈனும் நிலையில் இருந்ததாகவும் அதன் வயிற்றை கிழித்து கன்றுக்குட்டியை வீசி விட்டு மிகுதியை இறைச்சியாக்கியதாக தெரிய வந்துள்ளது.
இது தொடர்பில் இராமநாதபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய சந்தேகநபர்கள் நான்கு பேரையும் கால் நடையின் எச்சங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
மேலும் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.