அரசுக்கு சொந்தமான வாகனங்களில் இனி பொதுமக்களும் பயணிக்கலாம்: உதவ மறுத்தால் தண்டனை
கியூபா நாட்டில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை சமாளிக்க, அரசாங்க ஊழியர்கள் மற்றும் அமைச்சர்களின் வாகனங்களில் பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கு உதவ மறுக்கும் அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் தகவல் தெரியவந்தால் உரிய தண்டனை உறுதி எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, கியூபா கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. பொது போக்குவரத்து என்பது தற்போது கடுமையான ஒரு அனுபவமாக மாறிவிட்டது. கிட்டத்தட்ட 50% பேருந்துகள் தற்போது பயன்பாட்டில் இல்லை.
இந்த நிலையில் தான் கியூபா நிர்வாகம் புதிய விதியை அறிமுகம் செய்துள்ளது. ஹவானாவில் உள்ள மக்கள் தங்கள் பள்ளிகள் அல்லது வேலைகளுக்குச் செல்ல பேருந்துக்காக மணிக்கணக்கில் காத்திருப்பது வழக்கம்.
மட்டுமின்றி, கியூபாவில் பெரும்பாலான பொது போக்குவரத்து வாகனங்கள் பெரும்பாலான சிறிய வாகனங்களைப் போலல்லாமல் டீசல் எரிபொருளைப் பயன்படுத்துகின்றன.
தற்போது எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், பொது போக்குவரத்து வாகனங்கள் இனி மக்களுக்கு உதவும் வகையில் செயல்பட வேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்க வாகனங்கள் பொதுமக்களுக்கு உதவாமல் சென்றால், அது விதி மீறலாக கருதப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.