யாழில் கனேடிய பிரஜை தங்கியிருந்த வீட்டில் புகுந்து வாள்வெட்டு!
யாழ். அனலைதீவில் தங்கியிருந்த கனேடிய குடிமகன் ஒருவரை வாளால் வெட்டி காயப்படுத்திவிட்டு பெருமளவு பணம் கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் (24.02.2023) பதிவாகியுள்ளது.
கனடாவில் வசிக்கும் குடும்பம் ஒன்று தமது பூர்வீக வீட்டினை புனரமைக்கும் நோக்குடன் கணவன்,மனைவி ஆகியோர் அனலைதீவில் தமது வீட்டில் தங்கியிருந்து புனரமைப்பு வேலைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் நள்ளிரவு 12 மணியளவில் வீட்டினுள் நுழைந்த நால்வர் அடங்கிய முக மூடி கொள்ளை கும்பல் கனேடிய தம்பதியினர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு 3 ஆயிரம் அமெரிக்க டொலர், கடவுச்சீட்டுக்கள் , உள்ளிட்ட உடமைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
வாள்வெட்டுக்குக்கு இலக்காகிய கனேடிய குடிமகன்
கனேடிய தம்பதியினர் நாடு திரும்ப தயாராகிய நிலையிலே இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
இந்நிலையில் வாள்வெட்டுக்குக்கு இலக்காகி காயமடைந்த கனேடிய குடிமகனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இந்த கொள்ளை தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.