பிரித்தானியாவை அச்சுறுத்தும் இணைய தாக்குதல் ; கடுமையாகும் சட்டம்
பிரித்தானியாவில் அண்மைக் காலமாக இணைய தாக்குதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், அரச சேவைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது.
அதற்கமைய சட்டங்களைக் கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரித்தானிய தேசிய சுகாதார சேவை போன்ற அரசாங்க அமைப்புகளுக்கும், தனியார் துறை நிறுவனங்களுக்கும் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உயர் பாதுகாப்புத் தரங்களைக் கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சு, தேசிய சுகாதார சேவை, மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சர், ஜாகுவார் லேண்ட் ரோவர் போன்ற பிரபல நிறுவனங்கள் இணையவெளித் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்தன.
இதன் காரணமாக புதிய சட்டங்கள் மூலம் இணையவெளித் தாக்குதலைக் கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தச் சட்டப் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், பெரிய அளவிலான இணையத் தாக்குதல்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இணையவெளித் தாக்குதல் குறித்து நிறுவனங்கள் அரசாங்கத்திடமும் வாடிக்கையாளர்களிடமும் கட்டாயம் தெரிவிக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனங்களுக்கும் அரசாங்க துறைக்கும் தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்ப ஆதரவு, இணையப் பாதுகாப்புச் சேவைகளை வழங்கும் நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கான விதிமுறைகள் ஒழுங்குபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.