இரண்டு ரயில்களுக்கு நடுவே சிக்கி உடல் நசுங்கி பலியான நபர்: லண்டனில் பயங்கரம்
பிரிட்டன் தலைநகர் லண்டனில் சுரங்க ரயில் நிலையத்தில், இரண்டு ரயில்களுக்கு நடுவே சிக்கி தந்தை ஒருவர் உடல் நசுங்கி பலியான சம்பவத்தில் பொறுப்பேற்க வேண்டும் என லண்டன் போக்குவரத்துக்கு அந்த குடும்பம் கோரிக்கை வைத்துள்ளது.
லண்டனில் வாட்டர்லூ சுரங்க ரயில் நிலையத்தில் நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே உள்ள இடைவெளியில் 59 வயதான காமா முகமது வர்சமே என்பவர் தவறி விழுந்துள்ளார்.
2020, மே மாதம் 26ம் திகதி நடந்த இந்த கோர சம்பவத்தில், 10 பிள்ளைகளின் தந்தையான காமா முகமது வர்சமே என்பவர் உடல் நசுங்கி பலியானார்.
இந்த விவகாரத்தில் அவரது மகள் சமாரா முகமது தெரிவிக்கையில், எங்கள் தந்தையின் மரணம் ஒரு விபத்தைத் தவிர வேறு சில காரணங்களுக்காக நடந்தது என்று நாங்கள் நம்புகிறோம், இதுபோன்ற இக்கட்டான சூழலில் சிக்கும் எஞ்சியவர்களுக்கும் உதவ மாற்றங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், லண்டன் சுரங்க ரயில் சேவை அவர்களின் நடை மேடைகளில் என்ன நடக்கிறது என்பது பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க பொறுப்பேற்க வேண்டும் எனவும் சமாரா சுட்டிக்காட்டியுள்ளார்.