கனடாவில் பால் பொருட்கள் விலை உயரும்
மளிகைக் கடையில் உள்ள எல்லாவற்றையும் போலவே, பால், பாலாடைக்கட்டி, தயிர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றின் விலையும் 2022 ல் மிகவும் அதிகமாகவே இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பாலின் விலையில் மிகப்பெரிய உயர்வு ஒன்று பிப்ரவரி தொடக்கத்தில் அமுலுக்கு வருகிறது என கூறப்படுகிறது. 8.4% வரையில் பாலுக்கு விலை உயர்வு கோரப்பட்டுள்ளது. இதனால் லிற்றர் ஒன்றுக்கு 6cents வரையில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மளிகைக்கடைக்கு அனுப்பப்படும் தயாரிக்கப்பட்ட பால் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். இந்த விலையுயர்வானது கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்றே கூறப்படுகிறது.
ஒன்ராறியோ மாகாணத்தை பொறுத்தமட்டில் 3,500 பால் பன்ணைகள் செயல்படுகின்றன. அனைத்துமே குடும்பங்களால் செயல்படுத்தப்படுகிறது. மேலும், பால், வெண்ணெய், தயிர் மற்றும் பாலாடைக்கட்டி ஆகியவற்றை சில்லறை கடைகளில் விற்பனைக்காக தயாரிக்கும் 75 ஆலைகளும் செயல்பட்டு வருகிறது.
கனடா முழுவதிலும் உள்ள 200க்கும் மேற்பட்ட பண்ணைகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த விலை உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், மளிகைக் கடைகளில் பாலின் சில்லறை விலை 10 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம், அதே நேரத்தில் வெண்ணெய், சீஸ் மற்றும் தயிர் போன்ற பால் பொருட்களின் விலை 15 சதவிகிதம் வரை உயரலாம் என கூறப்படுகிறது.