ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு அல்பர்டா முதல்வர் விஜயம்
கனடாவின் அல்பர்டா மாகாண முதல்வர் டேனியல் ஸ்மித் ஆசிய நாடகளுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
ஆசியாவில் உள்ள முக்கிய சந்தைகளை விரிவுபடுத்தும் நோக்கில் ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக செல்ல உள்ளார்.
இந்த வாரம் வெள்ளிக்கிழமை அவர் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அல்பர்டா முதல்வரின் அலுவலகம் அறிவித்துள்ளது.
இப்பயணத்தின் முக்கிய நோக்கம், அல்பர்டாவின் எரிசக்தி, விவசாய மற்றும் பிற பொருளாதார சந்தைகளை ஆசியாவில் மேலும் வலுப்படுத்துவதாகும்.
ஜப்பானில், அரச அதிகாரிகள், இறக்குமதி நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி மற்றும் விவசாய துறையின் தலைவர்களுடன் சந்திப்புகள் நடைபெறவுள்ளதாகவும், ஜப்பானின் அதிகரித்து வரும் எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பு தேவையை பூர்த்தி செய்யும் நம்பகமான பங்காளியாக அல்பர்டாவை முன்வைத்து விளம்பரப்படுத்துவதாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
அதற்குப் பிறகு, தென் கொரியாவின் காங்க்வொன் மாநிலத்திற்கும் அவர் பயணம் செய்ய உள்ளார்.