அமெரிக்காவுக்கு எதிரான வரி விளம்பரங்களை தொடர உள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா அறிவிப்பு
பிரிட்டிஷ் கொலம்பியா அரசு அமெரிக்க மக்களை நோக்கி எதிர்-சுங்க விளம்பரங்கள் (anti-tariff ads) வெளியிடும் திட்டத்தை தொடர உள்ளதாக மாகாண முதல்வர் டேவிட் இபி தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை ரத்து செய்ததற்காக ஒன்டாரியோ அரசை குற்றம் சாட்டிய சில நாட்களுக்குப் பின்னர் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
இபி கடந்த வாரம், அமெரிக்காவின் மென்மரக்கட்டைக்கு எதிரான சுங்கக் கொள்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த விளம்பரங்கள் வெளியாகும் என அறிவித்திருந்தார்.

இந்த விளம்பரங்கள் மூலம், சுங்கக் கொள்கைகளின் பாதிப்பை நேரடியாக அமெரிக்க மக்களிடம் கொண்டு சேர்ப்பது மிக முக்கியம். அதற்கான உரிமையை மாகாணம் தக்கவைத்திருக்கிறது,” என அவர் கூறியுள்ளார்.
ஒன்டாரியோ மாகாணம் மேற்கொண்ட 75 மில்லியன் டொலர் மதிப்புள்ள விளம்பர முயற்சியை “தெளிவாக ஆதரிக்கிறேன்” என்றாலும், பிரிட்டிஷ் கொலம்பிய விளம்பரங்கள் அதன் அளவிலிருந்து வேறுபட்டவை என கூறியுள்ளார்.
இபியின் அலுவலகம் தெரிவித்ததன்படி, மென்மரக்கட்டை சார்ந்த விளம்பரங்கள் நவம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.