மரணம் நிகழ்வதற்கு சில நிமிடங்களே உள்ளன ; காசா மருத்துவமனையின் இயக்குநர் கலக்கம்
காசாவின் அல்ஸிபா மருத்துவமனையின் இயக்குநர் மரணம் நிகழ்வதற்கு சில நிமிடங்களே உள்ளன என்ற நிலையில் நாங்கள் இருக்கின்றோம் என கவவலை வெளியிடுள்ளார்.
காசாவில் இஸ்ரேலிய படையினரின் முற்றுகைக்குள்ளாகியுள்ள மருத்துவமனையிலிருந்து கருத்து தெரிவித்துள்ள முகமட் அல்சல்மியா , நாங்கள் உயிர்களை இழக்க ஆரம்பித்துள்ளோம்.
காயம்பட்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களும் உயிர் இழக்கின்றனர். இன்குபேட்டரில் உள்ள குழந்தைகள் கூடஉயிரிழக்கின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை வளாகம் சுற்றிவளைக்கப்பட்டு, மருத்துவமனையின் கட்டிடங்கள் இலக்குவைக்கப்படுகின்றன. அதோடு மருத்துவமனைக்குள் நடமாடும் எவரும் இஸ்ரேல் படைகளால் இலக்குவைக்கப்படுகின்றனர்.
வெளியே உள்ள இஸ்ரேலிய படையினர் எவரையும் உள்ளே அனுமதிக்கின்றார்கள் இல்லை, இன்குபேட்டரில் இருந்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக வேதனை வெளியிட்ட அவர், தீவிர சிகிச்சை பிரிவில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.