பேராயர் டெஸ்மன்ட் டுட்டு மறைவு; முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கவலை
தென்னாப்பிரிக்காவில் இனப் பாகுபாட்டை எதிர்த்ததற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டு (Desmond Tutu) காலமானார். உய்ரிழந்தபோது அவருக்கு வயது 90. ஞாயிற்றுக்கிழமை கேப்டவுனில் இறந்தார் என்று ஜனாதிபதி சிரில் ரமபோசாவின் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
1997 இல் பேராயர் டெஸ்மண்ட் டுட்டுக்கு (Desmond Tutu) புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தொற்று மற்றும் பிற நோய்களுக்கு சிகிச்சை பெற டுட்டு பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் பேராயர் டெஸ்மன்ட் டுட்டு (Desmond Tutu) உலகின் எல்லா இடங்களிலும் இடம்பெறும் அநீதி குறித்து கவலை கொண்டிருந்தார் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா (Barack Obama) தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பேராயர் டுஸ்மண்ட் டுட்டு (Desmond Tutu) எனக்கும் இன்னும் பலருக்கும் ஒரு வழிகாட்டியாகவும் நண்பராகவும் தார்மீக திசைகாட்டியாகவும் விளங்கியதாகவும் ஒபாமா (Barack Obama) கூறியுள்ளார்.
அதோடு அவர் ஒரு உலகளாவிய ஆத்மா என்றும் அவர் தனது சொந்தநாட்டில் விடுதலை மற்றும் நீதிக்கான போராட்டத்தின் உறுதியான அடித்தளமாக காணப்பட்டார் ஆனால் எல்லா இடங்களிலும் நடக்கும் கரிசனை குறித்து அவர் கரிசனை கொண்டிருந்தார்.
மேலும் அவர் ஒருபோதும் தனது நகைச்சுவை உணர்வையும் அவரது எதிராகளில் மனிதாபிமானத்தை கண்டறியும் தன்மையையும் இழக்கவில்லை என்வும் கூறிய ஒபாமா (Barack Obama) நானும் மிச்செலும் அவரை மிகவும் இழக்கப்போகின்றோம் எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.
