மனைவி இறந்த துக்கம்; தேம்பி தேம்பி அழுத ஓபிஎஸ் ; கை பிடித்து ஆறுதல் கூறிய சசிகலா
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி இன்று உயிரிழந்த நிலையில், சசிகலா மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி இன்று திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், இன்று உயிரிழந்த நிலையில், விஜயலட்சுமியின் உடல் தேனிக்கு எடுத்து செல்லப்பட்டு, இறுதிச்சடங்குகள் செய்யப்பட இருக்கிறது.
ஓபிஎஸ் மனைவியின் மறைவையடுத்து முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவன் உள்ளிட்டோர் நேரில் சென்று ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆறுதல் தெரிவித்தனர்.
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஹெம் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஓபிஎஸுக்கு ஆறுதல் கூறினார்.
ஜெயலலிதா பயன்படுத்திய அதிமுக கொடி கட்டப்பட்டிருந்த காரில் மருத்துவமனைக்கு சென்ற அவர், மனைவியின் பிரிவால் வாடும் ஓ.பன்னீர்செல்வத்தின் கரங்களை பற்றி சசிகலா ஆறுதல் கூறிய சமயம் ஓபிஎஸும் தேம்பி தேம்பி அழுதார்.
இந்நிலையில் அரசியல் பரபரப்புக்கு மத்தியில் ஓபிஎஸ்ஸை சசிகலா நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சம்பவம் முக்கிய அரசியல் தலைவர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.