அதிபர் இப்ராகிம் ரைசி மரணம்; விசாரணையில் இறங்கிய குழு
அதிபர் இப்ராகிம் ரைசி மற்றும் அவரது குழுவினர் பலியாவதற்குக் காரணமான ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணையை ஈரான் அரசு தொடங்கியுள்ளது.
ஈரான் அதிபர் இப்ராகிம் ரைசி, வெளியுறவுத்துறை மந்திரி உசைன் உள்பட 9 பேர் அஜர்பைஜான் நாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் நாடு திரும்பியபோது அஜர்பைஜான்-ஈரான் எல்லை அருகே வர்சகான் கவுண்டி என்ற இடத்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அனைவரும் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிட்டது. இந்த சம்பவத்தை விசாரிக்க உயர்மட்டக் குழுவின் தலைவராக ஈரானிய ஆயுதப் படைகளின் தலைமை தளபதி முகமது பாகேரியை நியமித்துள்ளதாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிரிகேடியர் அலி அப்துல்லாஹி தலைமையிலான குழுவினர் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு விசாரணை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி முடிந்ததும் விசாரணை முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் ரைசி உயிரிழந்த விவகாரம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.