நாளைமுதல் பயண கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் வியட்நாம்!
வியட்நாம் பிப்ரவரி 15 முதல் சர்வதேச விமானங்களில் COVID-19 கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவருகிறது. சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான கொவிட்-19 பயண கட்டுப்பாடுகளை பெப்ரவரி 15 முதல் நீக்குவதற்கு வியட்நாம் தீர்மானித்துள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம் தொற்றுநோயின் தொடக்கத்தில் கொவிட்-19 பரவலை தடுக்க கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்தது.
இதன்படி ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 10 சதவீதத்தைக் கொண்ட வியட்நாமின் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறைக்கு ஒரு பாரிய அடியாக இருந்தது.
இந்நிலையில் பெப்ரவரி 15 முதல் வியட்நாம் சர்வதேச விமானங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்கும்.
விமானங்களின் சேவை எண்ணிக்கை தொற்றுநோய்க்கு முந்தைய நிலைக்கு மீட்டமைக்கப்படும் என்று வியட்நாமின் சிவில் ஏவியேஷன் நிர்வாகத்தின் துணை இயக்குனர் டின் வியட் சோனை மேற்கோள் காட்டி Tuoi Tre செய்தி வெளியிட்டுள்ளது.
வியட்நாம் ஏற்கனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 15 நாடுகளுடன் சர்வதேச விமானங்களை படிப்படியாக மீண்டும் தொடங்கத் ஆரம்பித்துள்ளது. அதேவேளை தனிமைப்படுத்தப்பட்ட தேவைகளையும் தற்சமயம் வியாட்நாம் எளிமையாக்கியுள்ளது.
தடுப்பூசி போடப்பட்ட பயணிகளுக்கு இப்போது மூன்று நாட்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்படுவர்.
அதன்படி 98 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட 98 சதவீதம் பேர் குறைந்தது இரண்டு தடுப்பூசி டோஸ்களைப் பெற்றுள்ளனர் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன