அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனம்!
அமெரிக்காவில் குரங்கு அம்மை நோய்தொற்று பரவுவதால், அந்நாட்டில் பொது சுகாதார அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து அறுநூறை தாண்டி உள்ளது.
குரங்கு அம்மைக்கான தடுப்பூசி கிடைக்கும் வேகம் குறித்து பைடன்(Joe Biden) நிர்வாகம் விமர்சனங்களை எதிர்கொண்டதால் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் இப்போது குரங்கு அம்மையும் உலக அளவில் பரவி வருகிறது.
இந்த நோய் அமெரிக்காவில் அதிக அளவில் பரவியிருப்பதால் அந்நாட்டின் மாகாணங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அவசர நிலையை அறிவித்து வருகின்றன .

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.