கனடிய மகளிர் கால்பந்தாட்ட அணி ஒலிம்பிக் போட்டியில் தோல்வி
கனடிய மகளிர் கால்பந்தாட்ட அணி ஒலிம்பிக் போட்டித் தொடரில் தோல்வியைத் தழுவியுள்ளது.
நடப்பு ஒலிம்பிக் சாம்பியன்களாக திகழ்ந்த கனடிய அணி காலிறுதிச் சுற்றில் தோல்வியைத் தழுவியது.
ஜெர்மனி அணிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் எதிர்பாராதவிதமாக கனடா தோல்வயடைந்துள்ளது.
பாரிஸில் நடைபெற்ற இந்தப் போட்டியின் ஆட்ட நேரத்திலும் மேலதிக நேரத்திலும் இரு அணிகளும் கோல் எதனையும் போடவில்லை.
பின்னர் வெற்றியை நிர்ணயம் செய்வதற்காக பெனல்டி சூட் நடத்தப்பட்டது.
இதில் ஜெர்மனி அணி நான்குக்கு இரண்டு என்ற கோல் கணக்கில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஏனைய அணிகள் பயிற்சியில் ஈடுபடுவதனை ட்ரோன் மூலம் உளவு பார்த்ததாக கனடா அணி மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில், கனடா இந்தப் போட்டித் தொடரிலிருந்து காலிறுதிச் சுற்றுடன் வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.