உக்ரைனில் இருந்து 25 லட்சம் பேர் வெளியேற்றம்!
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், உக்ரைன் த நாட்டையே புரட்டி போட்டு விட்டது.
ரஷ்யாவின் மிலேச்சத்தனமான தக்குதலினால் உகரைன் குடிமக்கள், தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக , அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைகிற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிப்ரவரி 24ல் தொடங்கப்பட்ட ரஷியாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு உக்ரைனை விட்டு இதுவரை 25 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர்.
⚡️UN: At least 2.5 million Ukrainians have fled the country since Russia’s full-scale invasion began on Feb. 24.
— The Kyiv Independent (@KyivIndependent) March 12, 2022
According to the United Nations refugee agency, an estimated 4 million people may flee Ukraine.
இது இரண்டாவது உலகப்போருக்கு பின் ஐரோப்பா கண்ட மிக விரைவான வெளியேற்றம் என ஐ.நா.சபை அகதிகள் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதேவேளை ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையம், உக்ரைனில் இருந்து சுமார் 40 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறக்கூடும் என கூறியுள்ளது.