கனடாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர் சுட்டுக்கொலை!

Canada Police Car Chennai Indian Shooting Thailand British Columbia Phuket Rawai
By Sulokshi Feb 07, 2022 06:56 PM GMT
Report

 கனடாவிலிருந்து கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு  நாடு கடத்தப்பட்ட முன்னாள் பிரிட்டிஷ் கொலம்பியா இந்தியர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் தாய்லாந்தின் ஃபூகெட்டின் ராவாய் நகரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

32 வயதான ஜிமி “ஸ்லைஸ்” சந்து, வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் காரில் இருந்து இறங்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.

சந்து, தாய்லாந்தின் சமீபத்திய தீவின் தெற்கு முனையில் உள்ள கடற்கரை ரிசார்ட் வளாகத்தில் உள்ள வில்லாவின் உரிமையாளராகக் கூறப்பட்டவர். சம்பவம் குறித்து சாலோங் காவல்துறை நேற்று காலை செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இறந்த கனேடியரிடம் இரண்டு அடையாள அட்டைகள் இருந்தன. அவர் ‘மன்தீப் சிங்’ மற்றும் ‘அமர்ஜித் சிங் சிந்து’ ஆகியோருக்கான அடையாளத்தை வைத்திருந்தார். ஆனால், தாக்குதலில் பலியானது ஜிமி சாந்துதான் என்பதை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தியாவின் சென்னையில் பிறந்த சந்து, 7 வயதில் கனடாவுக்கு குடிபெயர்ந்து, பிரிட்டிஷ் கொலம்பியாவின் அபோட்ஸ்ஃபோர்டில் உறவினர்களுடன் வளர்ந்தார். அங்கு பல்வேறு குற்றக்கும்பல்களுடன் இணைந்து செயற்பட்ட அவருக்கு பல கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

அதன்பின்னர் ஜனவரி 2014 இல் அபோட்ஸ்போர்டில் தமது போட்டிக்கும்பலான ரெட் ஸ்கார்பியன் குழுவின் தலைவரான மாட் கேம்ப்பெல்லைக் கொன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஒரு வருடம் கழித்து தண்டனை நீக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு குடியேற்ற விசாரணையைத் தொடர்ந்து, 2016 இல் சந்து கனடாவில் இருந்து அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

அதன்பின்னர் 2018 ஆம் ஆண்டில், கெட்டமைன் போதைப்பொருள் தயாரிக்கும் சட்டவிரோத தொழிற்சாலையை நடத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுதலையானார். தொடர்ந்து ,தலைமறைவாகி மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா முழுவதும் அவர் இரகசியமாக வாழ்ந்து வருகிறார். அதேவேளை அவரது வலது கன்னத்தில் பெரிய தழும்பு இருந்ததால் அவரை செல்லமாக ‘ஸ்லைஸ்’ எ அழைக்கின்றனர்.

கடந்த ஆண்டு வான்கூவர் சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்ட மற்றொரு குற்றக் கும்பல் உறுப்பினரான கர்மன் கிரேவாலுடன் அவர் “நெருக்கமானவர்” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் குற்றம் சாட்டப்படவில்லை என தெரிவித்த பொலிஸார், இது தொடர்பான விவகாரத்தில், கடந்த வாரத்தில் துபாயில் சந்துவின் நெருங்கிய கூட்டாளி ஒருவரிடம் இருந்து “விலையுயர்ந்த செயின்” பறிக்கப்பட்டதாகவும், செயினை திருடிய நபர் அந்த பொருளை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஃபூகெட்டின் தெற்கே உள்ள கடலோர ரிசார்ட் நகரமான ரவாய்யில் உள்ள தி பீச் ஃபிரண்ட் ஹோட்டல் ஃபூகெட்டில் இரண்டு துப்பாக்கி ஏந்திய நபர்கள் புதர்களில் இருந்து வெளியேறி, அவரை சுட்டுக் கொன்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

நேற்று காலை 6.30 மணியளவில் சம்பவ இடத்திற்கு வந்த சாலோங் பொலிசார், ஃபூகெட் உரிமத் தகடுகளுடன் கூடிய சிவப்பு நிற SUV ஒன்றின் அருகே ரத்த வெள்ளத்தில் முகம் குப்புறக் கிடந்ததைக் கண்டனர்.   அவர் மீது 10 தோட்டாக்கள் பாய்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம், கனடாவில் அந்த நபரின் கடந்தகால நடவடிக்கைகளின் அடிப்படையில் இது ஒரு தொழில்முறை ‘கொலை’ எனத் தோன்றினாலும், இந்தத் தாக்குதல் குறித்து போலீஸார் இப்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த குற்றத்தில் தொடர்புடைய 2 பேரை பொலிலீசார் தற்போது தேடி வருகின்றதாகவும், சம்பவத்தில் பலியானவர் 32 வயதான மன்தீப் சிங் (ஜிமி சந்து மற்றும் அமர்ஜித் சிங் சிந்து) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறிய பொலிஸார், கொலைசெய்யப்பட்டவர் இந்தியாவில் பிறந்திருந்தபோதும் , அவர் கனேடிய பாஸ்போர்ட் வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

ரிசார்ட்டில் பணிபுரிந்த ஒரு துப்புரவு பணியாளர் மறுநாள் காலை சிங்கின் சடலத்தைக் கண்டார் . சிங்கின் பொருட்களை பொலிசார் தேடியபோது, ​​அவரிடம் “அமர்ஜித் சிங் சிந்து”, 33 என்ற நபரின் ஓட்டுநர் உரிமம் இருந்தது. துப்பாக்கிச் சூடு நடத்திய இடத்தில் இருந்து 19 வெற்று தோட்டாக்களையும், கொல்லப்பட்டவரின் காருக்குள் சிறிய அளவிலான கஞ்சாவையும் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

 உயிரிழந்த இந்தியர் ஜனவரி 27 ஆம் திகதி ஃபூகெட் வந்து ஹோட்டலில் தங்கியிருந்ததை போலீசார் உறுதிப்படுத்தி நிலையில்,   சடலம் பிரேத பரிசோதனைக்காக வச்சிர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் கனேடிய தூதரகத்தை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். 

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US