பேராயர் டெஸ்மன்ட் டுட்டுவின் மறைவிற்கு கனடா பிரதமர் இரங்கல்!
தென் ஆப்பிரிக்க பேராயர் டெஸ்மன்ட் டுட்டுவின் (Desmond Tutu) மறைவிற்கு கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) இரங்கல் வெளியிட்டுள்ளார்.
நோபள் சமாதான விருது வென்ற டெஸ்மன்ட் டுட்டு (Desmond Tutu) தனது 90ம் வயதில் நேற்று காலமானார். மிகவும் வலுவான நீதியின் குரல்களில் ஒன்றை உலகம் இழந்து தவிப்பதாக ஐஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இன ஒடுக்குமுறைகள், பாலின ஒடுக்குமுறைகள் என்பனவற்றுக்காக டெஸ்மன்ட் டுட்டு (Desmond Tutu) தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடாவில் பூர்வகுடியின மக்களுக்காகவும் டெஸ்மன்ட் டுட்டு (Desmond Tutu) குரல் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெஸ்மன்ட் டுட்டுவின் (Desmond Tutu) குடும்பத்திற்கும், தென் ஆப்பிரிக்க மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தெரிவித்துள்ளார்.