முற்றாக அழிந்த கனேடிய கிராமம்... பலர் மாயம்: வெப்ப அலையால் துயரம்
கனடாவில் வெப்ப அலை காரணமாக ஏற்பட்ட காட்டுத்தீயால் முற்றாக அழிந்துள்ள Lytton கிராமமானது மறு சீரமைப்பு செய்யப்படும் என மாகாண அரசு உறுதி அளித்துள்ளது.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வரலாறு காணாத வெப்ப அலை வீசி வருகிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் மட்டும் வெப்பம் காரணமாக இதுவரை 486 பேர் மரணமடைதுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் வெப்ப அலை காரணமாக ஏற்பட்ட காட்டுத்தீயால் பிரிட்டிஷ் கொலம்பியாவின் Lytton கிராமத்தின் பெரும்பகுதி சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Lytton மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள சுமார் 1,000 மக்களை பாதுகாப்பு கருதி வெளியேற்றியுள்ளனர். காட்டுத்தீயால் சேதமடைந்துள்ள பகுதிகளை விசாரணை உட்படுத்தப்படும் எனவும், உரிய முறையில் மறு சீரமைப்பு செய்யப்படும் எனவும் மாகாண முதல்வர் John Horgan அறிவித்துள்ளார்.
மட்டுமின்றி கடந்த 24 மணி நேரத்தில் 62 பகுதிகளில் தீ விபத்து தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் 29,000 முறை மின்னல் வெட்டியதாகவும் தெரிய வந்துள்ளது.
Lytton கிராமத்தில் காட்டுத்தீயில் சிக்கி சிலர் மாயமாகியுள்ளதாகவும், அவர்கள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்ட கிராம மக்கள் உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக உதவி மையங்களை நாடவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.