ரஸ்ய தாக்குதலில் தரைமட்டமான வைத்தியசாலை! புகைப்படத்திற்கு சர்வதேச விருது
ரஸ்யாவின் தாக்குதலில் தரைமட்டமான உக்ரைன் வைத்தியசாலையின் இடிபாடுகளிற்குள் இருந்து கர்ப்பிணியொருவரை மீட்பு பணியாளர்கள் மீட்பதை காண்பிக்கும் அசோசியேட்டட் பிரசின் புகைப்படத்திற்கு சர்வதேச விருது கிடைத்துள்ளது.
2022 ம் ஆண்டு மார்ச் ஒன்பதாம் திகதி கடும் காயங்களிற்குள்ளான பெண்ணையும் அவரது இடது கை வயிற்றில் காணப்படுவதையும் காண்பிக்கும் படத்தினை ஏபி புகைப்படப்பிடிப்பாளர் எடுத்திருந்தார்.
உக்ரைனின் கிழக்குபகுதி துறைமுகநகரான மரியபோலில் பதிவு செய்யப்பட்ட இந்த படம் ரஸ்யாவின் யுத்தத்தின் கொடுமையை வெளிப்படுத்தும் விதத்தில் உயிரற்ற தனது குழந்தையை Miron பிரசவித்த பின்னர் அந்த பெண் Iryna Kalinina உயிரிழந்தார்.
என்னால் மறக்க முடியவில்லை
இது நான் மறக்க விரும்புகின்ற தருணம் ஆனால் என்னால் மறக்க முடியவில்லை என மலோலெட்கா விருது குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னர் அப்புகைப்படத்தை எடுத்த, ஏபி புகைப்படப்பிடிப்பாளர் எவ்ஜெனி மலோலெட்கா Evgeniy Maloletka கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நான் அந்த சம்பவத்தை மறக்க முயல்கின்றேன் ஆனால் முடியவில்லை இந்த அனுபவம் என்னுடன் என்றும் தொடரும் எனவும் Evgeniy Maloletka குறிப்பிட்டிருந்தார்.
மிகவும் கடுமையான சூழ்நிலைகளின் மத்தியில் எவ்ஜெனி மலோலெட்கா ரஸ்யா உக்ரைன் யுத்தத்தின் மிகவும் தீர்க்கரமான படத்தை வெளியிட்டார். அவரது தளராத துணிச்சல் இல்லாவிட்டால் ரஸ்யாவின் மிகவும்கொடுரமான தாக்குதல் ஒன்றை பற்றி அறிய முடியாமல் போயிருக்கும் அவர் குறித்து நாங்கள் பெருமிதம் அடைகின்றோம் என ஏபியின் சிரேஸ்ட அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை8 ஒரு படம் உலகின் கூட்டுநினைவாக மாறுவது அபூர்வம் மிகவும் தீர்க்கமான ஒரு தருணத்தை பதிவு செய்ததன் மூலம் எவ்ஜெனி மலோலெட்கா Evgeniy Maloletka ஊடகபடப்பிடிப்பின் உயர்தராதாரத்தை தொடர்ந்துள்ளார் என ஏபியின் புகைப்பட இயக்குநர் டேவிட்அகே குறிப்பிட்டுள்ளார்.