கைலாசாவில் குடியுரிமை பெறுவதற்கு பக்தர்கள் விண்ணப்பிக்கலாம்; நித்தியானந்தா அறிவிப்பு

India Nithyananda
By Yadu Mar 07, 2023 09:21 AM GMT
Yadu

Yadu

Report

சுவாமி நித்தியானந்தாவின் பிரதிநிதிகள் ஐக்கியநாடுகள் சபையில் உரையாற்றிய செய்திகள் இணையத்தில் வைரலாகியதோடு அது தொடர்பிலான சர்ச்சையும் இப்போது வெடித்துள்ளது.

இதற்கிடையே கைலாசாவில் குடியுரிமை பெறவதற்கு பக்தர்கள் விண்ணப்பிக்கலாம் என நித்தியானந்தா தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு துஷ்ப்பிரியோக வழக்கில் சிக்கிய நித்தியானந்தா இந்தியாவை விட்டு தப்பிச் சென்று கைலாசா என்ற தனிநாட்டை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

அத்தோடு கைலாசாவை சுற்றிப்பார்க்க உலக பக்தர்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்ட நிலையில் நித்தியானந்தாவின் நகைச்சுவை பேச்சு காரணமாக அவருக்கு பக்தர்களைவிட அதிகமாக ரசிகர்களும் உருவாகினர்.

கைலாசாவில் குடியுரிமை பெறுவதற்கு பக்தர்கள் விண்ணப்பிக்கலாம்; நித்தியானந்தா அறிவிப்பு | Devotees Can Apply For Citizenship In Kailash

ஐ.நா வில் வெளியிடப்பட்ட கருத்து

இந்நிலையில் ஜெனிவாவில் கடந்த பெப்ரவரி மாதம் 24ஆம் திகதி நடைபெற்ற ஐ.நா வின் பொருளாதார, சமூக, மற்றும் காலாசார உரிமைகள் குழு கூட்டத்தில் ‘கைலாசா குடியரசு’ சார்பில் நித்தியானந்தாவின் பிரதிநிதிகளாக பெண்கள் சிலர் கலந்துகொண்டனர்.

இது தொடர்பிலான புகைப்படங்கள் நித்தியானந்தாவின் சமூகவலைத்தல பக்கங்களில் வெளியிடப்பட்டன. ‘முடிவெடுக்கும் விடயங்களில் பெண்களுக்கு சம உரிமை’ என்ற தலைப்பில் நடந்த விவாதத்தில் அனைத்து மகளிர் குழு பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டது.

அதில் பங்கேற்ற பெண் பிரதிநிதிகள் "நிலையான வளர்ச்சிக்கு கைலாசா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் உணவு, இருப்பிடம், உடை, கல்வி, மருத்துவ சிகிச்சை போன்றவை கைலாசாவில் இலவசமாக வழங்கப்படுகிறது.

பழமையான இந்துமத பாரம்பரியத்தை மீண்டும் கொண்டு வர விரும்பும் இந்து மத தலைவர் நித்யானந்தாவுக்கு தொந்தரவு அளிக்கப்படுகிறது.

சொந்த நாட்டிலேயே அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்ததோடு இந்த தொந்தரவை தடுத்து நிறுத்த தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு தங்கள் கூட்டத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை பேச அனுமதித்துள்ளது.

இதை பயன்படுத்தி கைலாசாவை ஐ.நா அங்கீகரித்தது போல் பொய்யான தோற்றத்தை நித்தியானந்தா ஏற்படுத்தியிருந்தார்.

இதனிடையே கற்பனையான நாட்டிலிருந்து வந்த பிரதிநிதிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை எப்படி அனுமதி அளித்தது போன்ற கேள்விகள் பரவலாக எழுந்தன.

இதற்கு ஐ.நா, ஜெனிவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு, தங்கள் கூட்டத்தில் எந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் பேச அனுமதி அளிக்கும் என்றும் தெரிவித்தது.

கைலாசாவில் குடியுரிமை பெறுவதற்கு பக்தர்கள் விண்ணப்பிக்கலாம்; நித்தியானந்தா அறிவிப்பு | Devotees Can Apply For Citizenship In Kailash

விண்ணப்பம்

இந்நிலையில் தற்போது நித்தியானந்தா தன்னுடைய நாட்டில் வசிப்பதற்கான குடியுரிமையை தனது பக்தர்களுக்கு வழங்க உள்ளதாகவும் அதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளமை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அத்தோடு அவரது சமூகவலைத்தளங்களில் இது தொடர்பிலான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக  கூறப்படும் நிலையில் அவரது பக்தர்கள் கைலாசா நாட்டின் குடியுரிமையை பெற விண்ணப்பிக்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

 

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, ப்றீமென், Germany

10 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US