திரைப்படங்களில் நடிக்கப் போகிறாரா தோனி? அவரே வெளியிட்ட தகவல்
ஐசிசி டி20 உலகக்கோப்பை, ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன் டிராஃபியை கைப்பற்றியது என, ஐசிசியின் மூன்று கோப்பைகளையும் வென்றெடுத்த ஒரே கிரிக்கெட் கேப்டன் திகழ்கிறார் மகேந்திர சிங் தோனி.
இவர் கடந்த (2020) ஐபிஎல் தொடரின் போது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி தகவலை அளித்தார்.
பின்னர் ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடிவரும் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியுடன் ஓய்வு பெறுவர் என தகவல் வெளிவந்த நிலை சமீபத்தில் அளித்த போட்டி ஒன்றில் எனது இறுதி போட்டி சென்னையில் தான் நடக்கும் என தெரிவித்து ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தகவலை வெளியிட்டார்.
இதேவேளை சினிமாவில் நடிப்பது குறித்து தோனி கருத்து தெரிவித்துள்ளார். விளம்பர படங்களில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளித்தாலும் சினிமாவில் நடிப்பது கடினமானது என மகேந்திர சிங் தோனி தெரிவித்துள்ளார்.
இதேவேளை மகேந்திர சிங் தோனியின் ரசிகர்கள் பட்டாளம் இவர் திரைப்படங்களில் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறிவருகின்றனர்.