கொரோனா தடுப்பூசி? நீரிழிவால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமிக்காக காத்திருக்கும் குடும்பம்
உலக நாடுகளையே ஆட்டம் காண வைத்த கொரோனா வைரசுக்கு பல்வேறு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்பட்டாலும், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
இந்நிலையில் தனக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுமா என ஆவலுடன் காத்திருக்கிறாள் Saskatchewan’sயை சேர்ந்த 12 வயதான Darnya Schemenauer.
டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள Darnya Schemenauerஐ, கடந்த ஓராண்டாகவே மிகுந்த கவனத்துடன் பார்த்து வருகிறார்கள் அவளுடைய பெற்றோர்.
பள்ளி வகுப்பு பாடங்களை வீட்டிலிருந்தே செய்து வரும் Darnya Schemenauer-க்கு, அடுத்த மாதம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்ற அரசின் அறிவிப்பு நிம்மதியை தந்திருப்பதாக தெரிவிக்கிறார் அவரது தந்தை.
Pfizer-BioNTech என்ற கொரோனா தடுப்பூசி 12 வயது முதல் 15 வயது வரையிலான சிறுவர்/சிறுமிகளுக்கு பாதுகாப்பான ஒன்று என கனடா சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் Saskatchewan’sன் சுகாதாரத்துறை அமைச்சர், தடுப்பூசிக்கான வயது வரம்பு குறித்து பள்ளிகளுடன் இணைந்து மேலதிக பகுப்பாய்வுகள் செய்யப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.