புலம்பெயர் ஈழத்தமிழ் மகன் பிரான்ஸ் மருத்துவதுறையில் சாதனை!
பிரான்ஸில் புலம்பெயர் ஈழத்தமிழ் இளையதலைமுறை பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்து வரும் நிலையில், மருத்துவத்துறையில் புதிய கருவியொன்றினை உருவாக்கி தேசிய மட்டத்தில் கவனத்தை சுஜீவன் முருகானந்தம் எனும் உயர்நிலை மாணவர் பெற்றுள்ளார்.
மன இறுக்க உளப் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ள 4-12 வயதுக்குட்பட்ட இளம் சிறார்களின் அக-மன நிலையினை உணர்ந்தறியும் வகையில், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கைவளையல் கருவியொன்றினை உருவாக்கியுள்ளார்.
இக்கருவியூடாக அச்சிறார்களுக்கு ஏற்படுகின்ற மன இறுக்க உளப் பாதிப்புக்களை, உடனடியாகவே கைபேசி வழியாக எச்சரிக்கும் திறன் கொண்டதோடு, ஏற்படுகின்ற பாதிப்புக்களை முறையாக ஆவணப்படுத்தும் திறன்கொண்டாதகவும் இக்கருவி உருவாக்கம் பெற்றுள்ளது.
நாடளாவியரீதியில் இத்துறைசார்ந்து 81 பேர் இதனை உருவாக்கியிருந்த நிலையில், இவர்களில் 6 பேர் தேசிய அளவிலான இறுதித்தேர்வுக்கு சென்றுள்ளனர்.
அந்தவகையில் இவர்களில் ஒருவராக சுஜீவன் முருகானந்தம் அவர்கள் "cœur léger " எனும் பெயரில் தனது கருவியை உருவாக்கியுள்ளார்.