இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் கைது
இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிலு விஜேதாச, கையூட்டல் அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் பழுதுபார்ப்புப் பணிகளைச் செய்வதற்கு அரசிற்குச் சொந்தமான பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களையும் சொத்துக்களையும் முறைகேடாகப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உரிய நடைமுறைகளைப் பின்பற்றாமல் இத்தகைய பணிகளைச் செய்ததன் மூலம், அரசுக்கு ரூபா 1.6 மில்லியனுக்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் நிலு விஜேதாச, கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.