வெள்ளை மாளிகையில் தீபாவளிப் பண்டிகை
அமெரிக்காவில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார். கடந்த திங்கள்கிழமை கோலாகலமாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
வெள்ளை மாளிகையில் இந்திய அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடியுள்ளார்.
அவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த ஐந்து திரி பித்தளை விளக்கை ஏற்றி, தீபாவளிப் பண்டிகை கொண்டாட்டத்தை தொடக்கிவைத்தார்.
இந்த விளக்கு இருளின் மீது ஒளியின் வெற்றி, அறியாமையின் மீது அறிவு மற்றும் தீமையின் மீது நன்மையின் வெற்றி என்பதைக் குறிக்கிறது என்றார்.
முன்னதாக மோடியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய டிரம்ப், தீபாவளி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார்.